ETV Bharat / state

துளிர் வினாடிவினா போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு!

author img

By

Published : Feb 21, 2020, 2:32 PM IST

கிருஷ்ணகிரி: மகாபலிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துளிர் வினாடிவினா போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த பள்ளி மாணவிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

The collector appreciate the number one students in the Dulir Quiz competition
The collector appreciate the number one students in the Dulir Quiz competition

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான துளிர் வினாடிவினா போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் ஈரோட்டில் மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர். மண்டல அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற துளிர் வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் கல்லாவி மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர்களான 8ஆம் வகுப்பைச் சேர்ந்த நட்சத்திரா, 9ஆம் வகுப்பைச் சேர்ந்த காவியா, நியாசு ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றனர். இவர்கள் பாராட்டு கேடயம், சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பெற்றனர்.

மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து மென்மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுமாறும் மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதையும் படிங்க: பாறைகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி உயிரிழப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.