ETV Bharat / state

ஓசூரு நகராட்சி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அலட்சியம்

author img

By

Published : Mar 15, 2019, 10:17 AM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் நகரப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல்

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 17-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதியன்று 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைப்பெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மார்ச் 10-ம் தேதி அறிவித்தது.தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.

election rules drafted
தேர்தல் வீதிமுறைமீறல்

இதையடுத்து அரசியல் கொடி கம்பங்கள், சின்னங்கள், தலைவர்கள் சார்ந்த பேனர்கள் அகற்றப்பட வேண்டும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஓசூரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 96 மணி நேரங்களை கடந்த நிலையில், சார்-ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் மீது அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளும், நகராட்சி பகுதியில் உள்ள மேம்பாலங்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களும், பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலே இருந்து வருகிறது.

ஓசூரில், கோட்டாட்சியர் விமல்ராஜ் அரசியல் கட்சிகளுக்கு விதிமுறைகளை விளக்கி செவ்வாயன்று கூட்டங்கள் நடத்தியும் அரசியல் கட்சிகளோ, அரசு அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Intro:Body:

ரமேஷ் ஓசூர் 15.03.2019 9942118775



ஓசூர் நகரப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம்





கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை முறையை அமல்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 17 வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, தமிழகத்தில் ஏப்ரல் 18 அன்று, 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மார்ச் 10 அன்று அறிவிப்பு செய்தது



தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது, அரசியல் கொடி கம்பங்கள், அரசியல் சின்னங்கள் அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள் அகற்றப்பட வேண்டும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் ஓசூரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 96 மணிநேரங்களை கடந்த நிலையில், சார்-ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் மீது அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளும், நகராட்சி முழுவதும் மேம்பால சுவர்களில் அரசியல் சுவர் விளம்பரங்களும், பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலே இருந்து வருகிறது.ஓசூரில், கோட்டாட்சியர் விமல்ராஜ் அரசியல் கட்சிகளுக்கு விதிமுறைகளை விளக்கி செவ்வாயன்று கூட்டங்கள் நடத்தியும் அரசியல் கட்சிகளோ, அரசு அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் முகம் சுழித்து செல்கின்றனர் .தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரியாக உள்ள கோட்டாட்சியரே மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் முனுமுனுத்து செலுகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.