ETV Bharat / state

கா்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: தமிழ்நாடு வந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதி

author img

By

Published : Apr 7, 2021, 12:18 PM IST

கிருஷ்ணகிரி: கர்நாடகாவில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கர்நாடக அரசுப் பேருந்துகள் இயங்காத நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கர்நாடக பஸ் ஸ்ட்ரைக்  கா்நாடகா போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம்  பஸ் ஸ்ட்ரைக்  6 வது ஊதியக்குழு  6th Pay Commission  Karnataka Bus Strike  Karnataka Transport workers strike
Karnataka Transport workers strike

கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று (ஏப். 07) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்கள் பணிக்கு வராததால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கான கர்நாடக அரசுப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பகுதியிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா். வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் வராததால் வேலைக்குச் செல்பவா்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பேருந்து இல்லாமல் கூட்ட நெரிசலில் தடுமாறும் பயணிகள்

தமிழ்நாட்டில், நேற்று (ஏப்.06) நடைபெற்ற வாக்குப்பதிவிற்காக பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகள் மட்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனா். இருப்பினும் குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் அதிகப்படியான கூட்டநெரிசல் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல் கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் எவ்வளவு விழுக்காடு வாக்குப்பதிவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.