ETV Bharat / state

போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி!

author img

By

Published : Feb 8, 2020, 4:02 PM IST

கிருஷ்ணகிரி: மதுவிலக்கு மற்றும் ஆயர் தீர்வைத்துறை சார்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு ஆய தீர்வை துறு சார்பில் கள்ளச் சாராயம், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் ப.முரளி, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து பேசிய கிருஷ்ணகிரி கோட்டாட்சியர்; கள்ளச் சாராயம், போதை பொருட்கள் பயன்படுத்துவோர் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

எனவே கள்ளசாராயம், போதை பொருட்களிலிருந்து விடுப்பட்டு உடலையும் மனதையும் காக்க வேண்டும். அவர்களின் குடும்ப வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி

இதையும் படிங்க: 'போதை அது சாவின் பாதை' - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி

Intro:மதுவிலக்கும் மற்றும் ஆயர் தீர்வைத்துறை சார்பில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால்
ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
தெய்வநாயகி துவக்கி வைப்பு.Body:மதுவிலக்கும் மற்றும் ஆயர் தீர்வைத்துறை சார்பில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால்
ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
தெய்வநாயகி துவக்கி வைப்பு.

விழிப்புணர்வு துண்டுப்
பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு ஆயத் தீர்வை
துறை சார்பில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த
விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் திருமதி.தெய்வநாயகி அவர்கள்
கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு உதவி
ஆணையர் ( ஆயம்) திரு.ப.முரளி, செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் திரு.மு.சேகர் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அவர்கள் தெரிவிக்கும் போது:
கள்ளச் சாராயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் உடல் அளவிலும்
மனதளவிலும் பல்வேறு பாதிப்பிற்க்கு உள்ளாகிறார்கள். நாளடைவில் மரணத்தை ஏற்படுத்தும்,
கண்பார்வை இழக்க நேரிடும். பசியின்றி உடல் நலம் கெடும், நிரந்தர உடல் நலம் கெடும், நிரந்தர
உடல் ஊனத்தை ஏற்படுத்தும், நினைவாற்றல் பாதிக்கப்படும், நரம்பு தளர்ச்சி ஏற்படும், உடல்
உறுப்புகள் செயலிழக்கச் செய்யும், குடும்பப் பாசம் விடுபடும், சமூகத்தில் மதிப்பு குறையும், தன்னிலை
மறந்து சீர்கேடுகள் நிகழ்த்துவர், தனிமைப்படுத்தப்படுவீர் எனவே கள்ளசாராயம் மற்றும் போதை
பொருட்களிலிருந்து விடுப்பட்டு உடலையும் மனதையும் காக்க வேண்டும். அவர்களின் குடும்ப
வாழ்க்கை தரமும் உயரும். கள்ளச் சாராயம் (ம) போதைப் பொருட்கள் பற்றிய 24 மணி நேர
கட்டணமில்லா தொலைபேசி 10581 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். என கிருஷ்ணகிரி
வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
குறித்து கிருஷ்ணகிரி புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவியர்கள் மற்றும் அறிஞர் அண்ணா
கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி சென்றார்கள். இப்பேரணியில் 300 மேற்பட்ட
மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இப்பேரணி பெங்களுர் சாலை வழியாக சென்று அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.