ETV Bharat / state

கிரஷர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்!

author img

By

Published : Mar 9, 2023, 8:59 PM IST

கிரஷர் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள காருகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (60). இவர் உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தில் கிரஷர் நடத்தி வந்தார். முனிராஜ்க்கும் உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பசபீரப்பா என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த தகராறில் ஆத்திரமடைந்த பசபீரப்பா மகன் சீனிவாசன் (39) மற்றும் அவரது நண்பர் நாகராஜ் (37) ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி கிரஷர் உரிமையாளர் முனிராஜை வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சீனிவாசன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று (மார்ச்.09) இந்த கொலை வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு வழங்கினார். கொலையாளிகள் சீனிவாசன் மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: மது கொடுக்காத கடை மீது பெட்ரோல் குண்டு.. நள்ளிரவில் போதை ஆசாமி அட்டகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.