ETV Bharat / state

கரூரில் பொங்கலுக்கு மண்பானை செய்யும் பணி தீவிரம்...!

author img

By

Published : Jan 9, 2020, 10:12 AM IST

கரூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

கரூரில் பொங்கல் மண்பானை செய்யும் பணி தீவிரம் மண்பானை செய்யும் பணி தீவிரம் Pongal Pot Making in Karur Pongal Pot Making Pot Making
Pongal Pot Making in Karur

பொங்கல் திருநாளன்று வீடுதோறும் மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கல் வைப்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது.

மேலும் புதுமண தம்பதியர் பெண் வீட்டிலிருந்து பொங்கலுக்கு கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் மண்பானையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் வயதான தம்பதியினர் பொங்கல் மண்பானை தயாரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வண்டி சக்கரத்தில் மண்பானை செய்து, மர கலப்பையைக் கொண்டு அதற்கு வடிவம் கொடுத்து வெயிலில் காய வைத்து, முழுமைபெற்ற பொங்கல் பானையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கணவர் குயவன் கனகராஜ் கூறுகையில், ஐந்து வயதில் மண்பாண்டம் செய்யக் கற்றுக் கொண்டு 20 வயதில் தனியாக தொழில்தொடங்கி மண்பானைகளை செய்து வருகிறார்.

தன்னுடைய படைப்பில் ஜாடி, அடுப்பு, குடுவை, அகல் விளக்கு உள்ளிட்டவை செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், தற்போது பொதுமக்கள் மண்பாணை பயன்படுத்துவதை தவிர்த்து பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட நவீன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.

தொடர்ந்து, மக்கள் பொங்கலுக்கு மட்டுமே மண்பாணை பயன்பாட்டை விரும்புகின்றனர். இதனால், மீதமுள்ள நாள்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் 100 நாள் வேலைக்கு செல்கிறேன். அப்படி இல்லையெனில் குடும்ப பிழைப்புக்காக ஏதாவது ஒரு தொழில் செய்து வருகிறேன் என்றார்.

மண்பானை செய்யும் குயவன் கனகராஜ்

அவரது மனைவி இலஞ்சியா கூறுகையில், மண்பாண்டம் தொழிலில் தனது கணவருக்கு உதவியாக இருந்து வருகிறேன். மண்பாண்டங்களை நெருப்பில் தீட்டும் பணி செய்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:

பாலியல் வழக்கில் இந்து மகாசபா தலைவர் கைதா?

Intro:பொங்கல் பானை தயாரிப்பில் ஆர்வம் காட்டும் வயதான மூத்த தம்பதியர்


Body:கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது பொங்கல் திருநாளன்று வீடுகளின் மண்பானையில் பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது தமிழரின் வழக்கம்.

நகரம் கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கல் வைப்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது மேலும் புதுமண தம்பதியர் பெண் வீட்டிலிருந்து பொங்கலுக்கு கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் மண்பானையும் ஒன்று ஏனெனில் வயதான தம்பதியர் பொங்கல் மண்பானை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன வடிவமைத்து அதனை வெயிலில் சிறிது நேரம் காய வைத்து மர கலப்பையைக் கொண்டு அதனை அடித்து வடிவமைக்கின்றன பின்னர் முழுமைபெற்ற பொங்கல் பானை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வயதான குயவன் கனகராஜ் கூறுகையில் ஐந்து வயதிலிருந்து மண்பாண்டம் தொழில் கற்றுக் கொண்டு 20 வயதிலிருந்து தனியாக தொழில் துவங்கி வேலை செய்து வருவதாகவும் ஜாடி அடுப்பு குடுவை அகல் விளக்கு போன்று செய்து இருப்பதாகவும் தற்போது இந்த தொழில் நலிவடைந்து வருவதாகவும் மக்கள் பொங்கலுக்கு மட்டுமே விரும்புகின்றனர் எனவே மீதமுள்ள நாளில் 100 நாள் வேலைக்கு செல்வதாகவும் இல்லை என்றால் வயல்களிலும் அல்லது கட்டிட தொழில் ஏதாவது ஒரு தொழில் குடும்ப பிழைப்புக்காக செய்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

அவரது மனைவி இலஞ்சியா கூறுகையில் மண்பாண்டம் தொழிலில் தனது கணவருக்கு உதவியாக இருந்து வருவதாகும் செய்த மண்பாண்டங்களை நெருப்பில் தீட்டி தனது கணவருக்கு உதவுவதாகவும் கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.