ETV Bharat / state

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நீர்; நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்

author img

By

Published : Aug 31, 2020, 5:11 PM IST

கரூர்: ஆண்டாள் கோயில் கீழ்ப்பாக்கம் கிராமத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்டச் செய்திகள்  அமராவதி ஆறு  ஆண்டாள் கோயில் கீழ்ப்பாக்கம்  karur district news  karur district latest news  amaravathi river
அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நீர்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆண்டாள் கோயில் கீழ்ப்பாக்கம் கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றின் நடுவில் சிலர் சட்டவிரோதமாக வட்டக் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குணசேகரன், " ஆண்டாள் கோயில் கீழ்ப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், முன்னாள் அதிமுக கவுன்சிலர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோரின் ஆதரவில் சில சுயநலவாதிகள் சட்டவிரோதமாக அமராவதி ஆற்றின் நடுவே வட்டக் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர்.

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நீர்

இதுகுறித்து மண்மங்கலம் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று (ஆகஸ்ட் 31) மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கரூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரூர்: கொசுவலை உற்பத்தி செய்ய மூலப்பொருள் இருக்கு ஆனா, ஆட்கள் இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.