ETV Bharat / state

கரூரில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

author img

By

Published : Jan 25, 2021, 4:20 PM IST

கரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த ராகுல்காந்திக்கு சின்ன தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூரில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு  கரூரில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்  கரூருக்கு ராகுல் காந்தி வருகை  ராகுல் காந்தி  Rahul Gandhi  Rahul Gandhi election campaign in Karur  An enthusiastic welcome to Rahul Gandhi in Karur
Rahul Gandhi election campaign in Karur

கரூர் மாவட்டத்தில், இன்று(ஜனவரி 25) தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது, கரூர் மாவட்ட எல்லையான சின்ன தாராபுரத்தில் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கரூர் நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாங்கல் பகுதியில் விவசாயிகளைச் சந்திக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமிய மக்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: தாராபுரத்தில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.