ETV Bharat / state

'செந்தில் பாலாஜி கோட்டையில் வெற்றி'க்கொடி நாட்டிய அதிமுக! மகிழ்ச்சியில் ர.ர.க்கள்!

author img

By

Published : Jan 12, 2020, 2:10 PM IST

Updated : Jan 12, 2020, 2:47 PM IST

கரூர்: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், எட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உள்பட அனைத்து பதவிகளையும் அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர்.

admk-won-all-union-local-body-election-at-karur
admk-won-all-union-local-body-election-at-karur

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் அம்மாவட்டத்திலுள்ள எட்டு ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக கண்ணதாசன், துணைத் தலைவராக தானேஷ் (எ) முத்துக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அனைத்திலும் அதிமுகவே வெற்றி வாகை சூடியது.

உள்ளாட்சித் தேர்தலில் கரூரை கைப்பற்றிய அதிமுக!

அதன்படி, வெற்றிபெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர்
க. பரமத்தி மார்க்கண்டயன் குழந்தைசாமி
அரவக்குறிச்சி வள்ளியாத்தாள் குருசாமி ஆண்டாள்
தாந்தோன்றி மலை சிவகாமி பெரியசாமி
கரூர் பாலமுருகன் தங்கராஜ்
தோகைமலை லதா ரங்கசாமி பாப்பாத்தி
குளித்தலை விஜய விநாயகம் இளங்கோவன்
கடவூர் செல்வராஜ் கைலாசம்
கிருஷ்ணராயபுரம் சந்திரமதி கவிதா

கரூர் மாவட்டம் அமமுகவிலிருந்து விலகி திமுக கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டை என்று கருதப்படுகிறது. இங்கு அனைத்துப் பதவிகளிலும் வெற்றிபெற்றிருப்பது கரூர் அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி கோட்டையைக் கைப்பற்றியது திமுக கூட்டணி!

Intro:மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அனைத்து பதவிகளையும் கைப்பற்றியது அதிமுக.
Body:கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் கரூரில் உள்ள எட்டு ஒன்றிய அலுவலகங்களில் இன்று நடைபெற்றது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் போன்ற அனைத்து பதவிகளையும் அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தில் இல்லாத அளவிற்கு 100 சதவீத வெற்றியை அளித்திருக்கிறது.

கரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக
கண்ணதாசன் 4 வது வார்டு (அதிமுக)


கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவராக தானேஷ் (எ)முத்துக்குமார் (அதிமுக)



மறைமுக தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்..

1. க.பரமத்தி ஒன்றியக் குழு
தலைவராக *#மார்க்கண்டயன்*# தேர்வு . (அதிமுக) 4 வார்டு

 

   க.பரமத்தி ஒன்றியக்குழு துணைத் தலைவராக அதிமுக வைச் சேர்ந்த குழந்தைசாமி தேர்ந்துடுக்கப்பட்டார்.




2. அரவக்குறிச்சி ஒன்றிய குழு தலைவராக வள்ளியாத்தள் குருசாமி (அதிமுக ) 2 வார்டு


அரவக்குறிச்சி ஒன்றிய துணைத் தலைவராக  அதிமுகவைச் சேர்ந்த ஆண்டாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.




3.  தாந்தோன்றி மலை ஒன்றியக் குழு தலைவராக சிவகாமி போட்டியின்றி தேர்வு 


தான்தோன்றி  ஒன்றிய துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பெரியசாமி தேர்வு செய்யப்பட்டார் .



4 கரூர் ஒன்றியக் குழு தலைவர் பாலமுருகன் அதிமுக போட்டியின்றி தேர்வு


 கரூர் ஒன்றிய துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார் .



5. தோகமலை ஒன்றியக் குழு உறுப்பினராக லதா ரெங்கசாமி 8வது வார்டு அதிமுக தேர்வு


தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக பாப்பாத்தி சின்ன வழியான அதிமுக தேர்வு

6. குளித்தலை ஒன்றியக் குழு தலைவராக விஜய விநாயகம் 4வது வார்டு அதிமுக போட்டியின்றி தேர்வு


குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராக இளங்கோவன் தேர்வு இளங்கோவன் 6 வாக்குகள் திமுக சார்பாக போட்டியிட்ட முருகேசன் நான்கு வாக்குகள்



7. கடவூர் ஒன்றியம் குழு தலைவர் செல்வராஜ் | 2வது வார்டு அதிமுக போட்டியின்றி தேர்வு


கடவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக கைலாசம் தேர்ந்தெடுக்கப்பட்டனர், 



8. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய  குழு தலைவர் சந்திரமதி 7 வது வார்டு .


கிருஷ்ணராயபுரம்  ஒன்றிய துணைத் தலைவராக  அதிமுகவைச் சேர்ந்த  கவிதா தேர்வு செய்யப்பட்டார்.Conclusion:
Last Updated : Jan 12, 2020, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.