ETV Bharat / state

தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்

author img

By

Published : Oct 23, 2022, 10:05 AM IST

கன்னியாகுமரியில் உள்ள பிரபல பேக்கரி கடையில் வாங்கிய தின்பண்டத்தில் புழுக்கள் உயிருடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்
தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்

கன்னியாகுமரி: தீபாவளி திருநாள் நாளை (அக் 24) கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வகைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையில் பெரும்பாலான பொதுமக்கள் தின்பண்டங்களை வாங்கிச் சென்று வருகின்றனர். அப்படி வாங்கி சென்ற சென்ற தின்பண்டங்களில் புழுக்கள் இருந்துள்ளன. அதனால் வாடிக்கையாளர் கடையில் சென்று முறையிட்டுள்ளார். இதனிடையே அந்த தின்பண்டங்களில் புழுக்கள் நெளிந்து உயிருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள்

இதனால் பதற்றமடைந்துள்ள குமரி மாவட்ட பொதுமக்கள், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் பேக்கரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களின் அலட்சியமே தரமற்ற இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: ஆவின் பாலக குலாப் ஜாமுனில் பூஞ்சை... வாடிக்கையாளர் அதிர்ச்சி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.