ETV Bharat / state

ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ

author img

By

Published : Feb 22, 2020, 6:12 AM IST

Updated : Feb 22, 2020, 8:06 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

Wild fire in the Western Ghats Aralvaimozhi  Wild fire in the Western Ghats  Western Ghats Aralvaimozhi  ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ  மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ  காட்டுத் தீ
Wild fire in the Western Ghats Aralvaimozhi Wild fire in the Western Ghats Western Ghats Aralvaimozhi ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ காட்டுத் தீ

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப நாட்களாக வேளிமலை அசம்பு மலை போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை ஆரல்வாய்மொழி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்க பகுதியான தாடகை மலையின் பின்புறம் உள்ள மலையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு தீப்பிடித்து எரிந்து வருகிறது.

ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ.

இதனால் விலை உயர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் மூலிகைகள் போன்றவை சேதமடைந்து வருகின்றன. இதேபோன்று இன்றும் வேளி மலைப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன.

பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வந்த தீ விபத்து காரணமாக பெருமளவு இழப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Feb 22, 2020, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.