ETV Bharat / state

நாகர்கோவில் அருகே விசிக நிர்வாகி வெட்டி படுகொலை

author img

By

Published : Aug 6, 2019, 6:10 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே விடுதலைக் கட்சி நிர்வாகியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

murder

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் புஷ்பாகரன்(39). விவசாய கூலி வேலை பார்த்து வரும் இவர் விடுதலைச் சிறுத்தை கட்சியில் ஒன்றிய நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் புஷ்பாகரனை கொலை செய்வதாக மிரட்டிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலையில் புஷ்பாகரன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக ஓடஓட வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்யும் காவல் துறையினர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி புஷ்பராஜ் சி.டி.எம்.புரத்தில் ஓட ஓட வெட்டி கொலை . கும்பலுக்கு போலிசார் வலை விச்சு. பரபரப்பு.Body:tn_knk_04_murder_men_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி புஷ்பராஜ் சி.டி.எம்.புரத்தில் ஓட ஓட வெட்டி கொலை . கும்பலுக்கு போலிசார் வலை விச்சு. பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை- யை சேர்ந்தவர் புஷ்பாகரன் வயது 39. இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். புஷ்பாகரன் விடுதலை சிறுத்தை கட்சியில் ஒன்றிய நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று இதே பகுதியை சேர்ந்த சிலர் புஷ்பாகரனை கொலை செய்வதாக மிரட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று பகல் புஷ்பாகரன் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்து தப்பித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அந்த கும்பல் அவரை வீட்டுக்கு செல்ல விடாமல் சித்திரை திருமகராஜாபுரம் பகுதியில் வைத்து வெட்டி சாய்த்துள்ளனர். வெட்டு பட்டு கை தொங்கிய நிலையில் தப்பி பிழைக்க அருகில் உள்ள சந்தில் தப்பி ஓடவே, அந்த கும்பல் அவரை சுவரோடு வைத்து வெட்டி கொலை செய்தனர். ஏற்கனவே இதே பகுதியில் கடந்த 20 தினங்களுக்கு முன் இருவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்நிலையில் அதே பகுதியில் தொடர்ந்து நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த கொலை குறித்து சுசீந்திரம் போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.