ETV Bharat / state

குடும்பத்தினருடன் குமரிக்கு வந்த நிதின் கட்கரி!

author img

By

Published : Jun 8, 2019, 4:31 PM IST

கன்னியாகுமரி: ஒரு நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒருநாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்தார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

கன்னியாகுமரிக்கு குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் வருகை

பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கிய அவர், விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தார். மத்திய அமைச்சர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

TN_KNK_01_08_CENTRALMINISTER_RECIVED_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அரசின் சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வருகை. அண்டை மாநிலமான கேரளாவில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி அவருடன் வருகை தந்த மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். மத்திய அமைச்சருடன் அவரது உறவினர்கள் 13 பேர் வருகை தந்துள்ளனர். தமிழக அரசின் அரசு விருந்தினர் மாளிகையில் வருகை தந்தவர்கள் மதிய வேளையில் தங்கள் குடும்பத்தினருடன் உணவருந்தினர். பின்னர் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை,புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ,சூரிய அஸ்தமனம் போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சர் வருகையை யொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மத்திய அமைச்சர் செல்லும்போது லிப்ட் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.