ETV Bharat / state

சுனாமி நாள்: குமரியில் நினைவு திருப்பலி!

author img

By

Published : Dec 26, 2020, 2:09 PM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நினைவு திருப்பலி நிறைவேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி தினம்
சுனாமி தினம்

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. இதனால் தமிழ்நாட்டில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. அந்த தீரா வடுக்களை நினைவுகூரும் 16ஆம் ஆண்டு இன்று (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுனாமி நினைவு நாளான இன்று (டிச. 26) குமரி மாவட்டம் மணக்குடி மீனவர் கிராமத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக, நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஆலயத்திலிருந்து கல்லறை தோட்டம் வரை அமைதி ஊர்வலம் சென்று உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யபட்டவர்களின் ஸ்தூபியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் சுனாமி எந்த நாட்டிலும் இனி வரக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.