ETV Bharat / state

"கைது என்றால் நெஞ்சுவலி வரும்" - செந்தில் பாலாஜி குணமாக வாழ்த்தும் சீமான்

author img

By

Published : Jun 14, 2023, 1:23 PM IST

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வசதிக்கு ஏற்ப அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் என கூறியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி குணமாகி வர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

கைது என்றால் நெஞ்சுவலி வருவதை நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம்
கைது என்றால் நெஞ்சுவலி வருவதை நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம்

கைது என்றால் நெஞ்சுவலி வரும்... செந்தில் பாலாஜி குணமாக வாழ்த்தும் சீமான்..

நாகர்கோவில்: நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 14) மாலை நாகர்கோவிலில் நடைபெற உள்ள நிலையில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று அதிகாலையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைதுசெய்தது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் மதுபான பார்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்றது இந்நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஒன்றிய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இது போல் பல வேலைகளை ஒன்றிய அரசு செய்யும் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள்” என கூறினார்.

இதையும் படிங்க: மோடி-அமித்ஷாவால் இயக்கப்படும் விசாரணை அமைப்புக்கள்: ரா முத்தரசன் குற்றச்சாட்டு

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா பாணி எனினும் இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

யார் வந்தாலும் அவர்களது வசதிக்கு ஏற்ப அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். கைது என்றால் நெஞ்சுவலி வருவது எல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை மத்திய அரசு செய்யும். இது எதிர்பார்த்தது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

சிபிஐ அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை இது கொடுங்கோலாட்சி முறை எனவும் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழல் என குற்றம் சாட்டுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை. மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று என்று கூறினார் கூறினார்.

இதையும் படிங்க: ஏரோபிளேன் ரிப்பேர் பாக்கலாம் : சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.