ETV Bharat / state

கடலில் தவறி விழுந்தவர்களை மீட்க நவீன படகு அறிமுகம்!

author img

By

Published : Sep 24, 2019, 1:09 PM IST

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி பகுதியில் கடலில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணிக்காக கடலோரக் காவல் குழுமம் நவீன படகை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

police-newboat

மும்பையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்னர், கடல்வழி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன ரோந்துப் படகுகள், துப்பாக்கி, பைனாகுலர் போன்ற கருவிகள் மூலம் கடல்வழி ரோந்துப் பணியை, குமரி கடலோரப் பாதுகாப்பு குழுமம் தீவிரப்படுத்திவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடலில் தவறி விழுந்து தத்தளிக்கும் நபர்களை அதிவேகமாகச் சென்று மீட்கும் வகையில் புதிதாக நவீன படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் தவறி விழுந்தவர்களை மீட்க நவீன படகு அறிமுகம்

இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும அலுவலர்கள், "தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நவீன வாகனம் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். கடல் சீற்றத்திலும், இந்த வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் இயக்க தேவையான பயிற்சியை விரைவில் அளிக்க, அத்துறை நிபுணர்கள் வரவுள்ளனர். இதேபோன்று கடல்வழி ரோந்துக்கென நவீன படகும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆற்றில் பாய்ந்த பைக் - கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறையினர்!
.

Intro:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் கடலில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணிக்காக கடலோர காவல் குழுமம் நவீன படகை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.Body:tn_knk_01_police_newboat_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் கடலில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணிக்காக கடலோர காவல் குழுமம் நவீன படகை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்னர், கடல் வழி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகிறது.
பல கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன ரோந்து படகுகள், துப்பாக்கி, பைனாகுலர் போன்ற கருவிகள் மூலம் கடல் வழி ரோந்து பணியை, குமரி கடலோர பாதுகாப்பு குழுமம் தீவிரப்படுத்தி வருகிறது.
சின்னமுட்டம், மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும், கடல் மணலில் வேகமாக செல்லும் "ஆல்ட்ரைன் வெகிகிள்" மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடலில் தவறி விழுந்து தத்தளிக்கும் நபர்களை அதிவேகமாக சென்று மீட்கும் வகையில் புதிதாக நவீன படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படகு தற்போது சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த
பைபரில் ஆன இந்த படகை இரண்டு பேர் எளிதாக தூக்கி கொண்டு செல்லும் வகையில், இந்த படகு உள்ளது.
இதுகுறித்து கடலோர பாதுகாப்புக்குழும அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்த நவீன வாகனம் கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
கடல் சீற்றத்திலும், இந்த வாகனத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இயக்க தேவையான பயிற்சியை விரைவில் அளிக்க, அத்துறை நிபுணர்கள் வரவுள்ளனர். இதேபோன்று கடல் வழி ரோந்துக்கென நவீன படகும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.