பலவேசக்காரர் சுவாமி கோவில் கொடை விழாவில் வாழைத்தார் போட்டி - 4 கிராம் மோதிரம் பரிசளிப்பு!

author img

By

Published : Mar 19, 2023, 1:19 PM IST

Etv Bharat

நாகர்கோவில் அருகே தாரவிளை அருள்மிகு பலவேசக்காரர் சுவாமி கோவில் கொடை விழாவில் நடந்த வாழைத்தார் போட்டியில் முதல் பரிசாக 4 கிராம் தங்க மோதிரத்தை அருள் என்பவர் தட்டிச் சென்றார்.

பலவேசக்காரர் சுவாமி கோவில் கொடை விழாவில் வாழைத்தார் போட்டி - 4 கிராம் மோதிரம் பரிசளிப்பு!

கன்னியாகுமரி: கோயில் திருவிழாக்கள் என்றாலே ஆடு வெட்டி, கிடா வெட்டி, கோழி அறுத்து, தீ மிதித்து எனப் பல்வேறு வகையான பூஜைகள் செய்து இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக களைகட்டி இருக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாரவிளை கிராமத்தில் அருள்மிகு பலவேசகாரர் சுவாமி கோயில் உள்ளது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் மார்ச் மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் விவசாயம் செழித்து வளர வேண்டும், விவசாயிகள் வளம் பெற்று விளைவித்த பயிர்களை கௌரவிக்க வேண்டும், அதனைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கொடை விழா நடைபெற்று வருகிறது.

இந்தக் கொடை விழாவில் விவசாயிகளை பல்வேறு விதமாக கௌரவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட வாழைத்தார்களை கொண்டு போட்டி நடத்துகின்றனர். அதன்படி, அவற்றை எடை போட்டுக்கொண்டு அதனை மதிப்பீடு செய்து அதிக எடை கொண்ட வாழைத்தாருக்குப் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கொடைவிழா நடைபெற்றது. இந்த கொடை விழாவில் கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், அபிஷேகம் தீபாராதனை, திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜைகள் ஆகியவை நடந்தன.

நேற்றிரவு (மார்ச்.18) இந்த கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குலை வாழைத்தார் போட்டி நடைபெற்றது. வெகு விமரிசையாக நடந்த இப்போட்டியில், தரமாக செழிப்புடன் வளர்ந்த வாழைத்தார்களை விவசாயிகள் எடுத்து வந்து கோயிலின் முன்பு வரிசையாக அடுக்கி வைத்தனர். பின்னர், விவசாயிகளுக்கு போர்த்தி மரியாதை செய்ய வேண்டிய பொன்னாடைகளை வாழைத்தார்களுக்கு அணிவித்தனர்.

பின்னர் போட்டி நடைபெற்றது. இதில் இயற்கையான முறையில் தயாரித்தல், நல்ல விளைச்சல், எடை என்ற அடிப்படையில் வாழைத்தார்கள் தரமானதாக தயார் செய்வது உள்ளிட்டப் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்கமோதிரமும், இரண்டாவது பரிசாக 3000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இந்த வாழைத் தார் போட்டியில் செவ்வாழை, மட்டி உள்ளிட்ட பலவகை வாழை ரக மரங்கள் போட்டியில் இடம்பெற்றன.

இதனைத்தொடர்ந்து, இயற்கையான முறையில் தயாரித்தல், நல்ல விளைச்சல், நல்ல எடை, தரமானதாக வாழைத்தார்கள் என்பன உள்ளிட்டவைகளின் அடிப்படையில், இப்போட்டி நடத்தப்பட்டது. செவ்வாழை, மட்டி, பாளையங்கோட்டை வாழைப்பழம் உள்ளிட்ட பல ரகங்கள் இந்த வாழைத்தார் போட்டியில் இடம்பெற்று இருந்தன.

இந்தப் போட்டியில் தாரவிளை ஊரைச் சேர்ந்த விவசாயி அருள் என்பவர் முதல் பரிசான 4 கிராம் தங்க மோதிரத்தை தட்டிச் சென்றார். தங்கராஜ் என்ற நபர் இரண்டாம் பரிசான ரூ.3000 மதிப்புள்ள பரிசுப் பொருளையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் காலங்களில் இந்தப் போட்டியினை மற்ற விவசாயப் பொருட்களுக்கும் நடத்த இருப்பதாகவும், வாழைத்தார் போட்டியில் இனிவரும் காலங்களில் அதிக அளவில் விவசாயிகள் இதில் பங்கு பெற ஊக்குவிக்கப்படும் என்பதையும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாழைத்தார் போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் வக்கீல் தொழில் முதன்மைத் தொழிலாகும் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.