ETV Bharat / state

கன்னியாகுமரியில் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச பால்!

author img

By

Published : Apr 11, 2020, 6:59 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குத் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ஏழைத் தாய்மார்களுக்குப் பாலுக்குரிய இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டன.

free_milk_children_
free_milk_children_

ஊரடங்கு உத்தரவு காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்குப் போதுமான பால் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதையடுத்து, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைத் தாய்மார்களுக்கு ஆவின் பாலுக்குரிய டோக்கன்களை இலவசமாக வழங்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் இணைந்து காவல்துறையினர் இதற்கான டோக்கன்களை வழங்கினர். ஏழைத் தாய்மார்கள் இந்த டோக்கன்களை ஆவின் பால் பூத்துகளில் கொடுத்து பால் பாக்கெட்டுகளை வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்தத் தொண்டு நிறுவனம், காவல்துறையினருக்கு முகக் கவசங்கள், கையுறைகள் போன்ற பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காய்கறி கடைக்கான அனுமதி சீட்டு அலுவலர்களிடம் கிடைக்கும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.