ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Jun 2, 2019, 4:43 PM IST

கன்னியாகுமரி: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஜெயசேகரன் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம் ஓசூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த லோகேந்திரன் என்பவரது மகள் தனுஷியா (19), முதலாம் ஆண்டு கதிர்வீச்சியியல் மருத்துவ தொழில்நுட்ப பிரிவில் படித்து வந்துள்ளார். அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை விடுதிக்கு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், மதியவேளை நெடுநேரமாகியும் தனுஷியாவின் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தனுஷியா தன் துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கியது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தனுஷியாவின் அறையை மாற்று சாவி கொண்டு திறந்து சடலைத்தை மீட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனுஷியாவின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளைக் கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

இதனையடுத்து தனுஷியாவின் மரணம் குறித்து தகவல் அறிந்து மருத்துவக் கல்லூரி விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவரது குடும்பத்தினர், இந்த மரணம் குறித்து விடுதி ஊழியர்களிடம் கேள்வியெழுப்பினர்.

அப்போது கல்லூரி விடுதி ஊழியர்கள் தனுஷியா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், தனுஷியாவின் உறவினருக்கும் கல்லூரி விடுதி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மருத்துவ மாணவர்கள் படிப்பு சுமையினால் தற்கொலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்று திரும்பிய மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN_KNK_03_01_STUDENT_SUICIDE_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபல ஜெயசேகரன் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை இது தொடர்பாக நேசமணிநகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஜெயசேகரன் மருத்துவமனை மற்றும் அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் மருத்துவ தொழில்நுட்ப பிரிவில் மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் மற்றும் மருத்துவ தொழில் நுட்ப பிரிவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஓசூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த லோகேந்திரன் என்பவரது மகள் தனுஷியா வயது 19 . இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் ஆண்டு கதிர்வீச்சியியல் மருத்துவ தொழில் நுட்ப பிரிவில் சேர்ந்துள்ளார். விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை சென்ற மாணவி இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் வந்துள்ளார் . இந்நிலையில் மதியவேளை நெடுநேரம் ஆகியும் கதவு திறக்காத நிலையில் மற்றொரு மாணவி தனுஷியாவின் அறையில் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார். அங்கு துப்பட்டா பயன்படுத்தி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு தனுசியா காணப்பட்டுள்ளார் . அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மருத்துவமனை நிர்வாகம் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேசமணிநகர் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மாணவியின் செல்போன் உள்ளிட்ட உடமைகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையே கல்லூரி விடுதி வளாகத்திற்கு காலை 8 மணிக்கு வந்த மாணவியை 11 மணிக்கு வந்ததாக கல்லூரி நிர்வாகம் உறவினரிடம் தெரிவித்ததால் சிசிடிவி காட்சிகளை காண்பிக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.