ETV Bharat / state

நாகர்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

author img

By

Published : Sep 10, 2020, 5:07 PM IST

கன்னியாகுமரி: கேரள மாநிலம் குருவாயூர் கோயில் ஆகம விதிகளின்படி குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டாரத்தில் உள்ள சில கோயில்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் வட்டாரத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
நாகர்கோவில் வட்டாரத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில், கிருஷ்ண ஜெயந்தியன்று வழக்கமாக சிறுவர்- சிறுமிகளுக்கு கிருஷ்ணன், ராதை வேடமணிந்து உறியடி திருவிழா, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தி கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக கோயில்களில் கோலாகல ஏற்பாடுகள் தவிர்க்கப்பட்டு, பக்தர்கள் சென்று வணங்கும் வகையில் சாமிக்கு அர்சனைகளும், அபிஷேகங்கள் மற்றும் எளிமையான நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்தன.

இந்நிலையில் கேரள மாநிலம் குருவாயூர் கோயில் ஆகமவிதிப்படி குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டாரத்தில் சில கிருஷ்ணன் கோவில்களில் இன்று (செப்.10) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அதன்படி, நாகர்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியோடு கிருஷ்ண பகவானை வணங்கி சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.