ETV Bharat / state

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

author img

By

Published : Aug 19, 2022, 10:04 AM IST

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கருவறை முன்பு அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணரை வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கன்னியாகுமரி: ஆவணி மாதம் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி நாளில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உலகில் அவதரித்ததாக ஐதீகம் இருந்து வருகிறது. நேற்று ஆவணி மாதம் அஷ்டமி நட்சத்திரத்தையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாபட்டது.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஆதிகேசவ பெருமாள் கருவறை முன்பு அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

அங்கு தொட்டிலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பலராமன் குழந்தை பருவ சிலைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் தொட்டிலை தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பக்கர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிவித்து ஆலயத்தில் அழைத்து வந்தது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேரளாவிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: அப்துல் கலாம் கனவு கண்டது போல இந்தியா வல்லரசாக மாறும் எல் முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.