ETV Bharat / state

குமரிக்கு படையெடுக்கும் கேரள மக்கள்!

author img

By

Published : Sep 14, 2019, 9:38 AM IST

கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

kanniyakumari

கேரளாவில் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கேரளா மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளையுடன் நிறைவடைவதால் கடந்த சில தினங்களாகவே கேரளா சுற்றுலா பயணிகளின் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. திருவோணம் பண்டிகை அன்று கன்னியாகுமரியில் ஓரளவு கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

kerala-tourist-celeberated-onam-in-kanyakumari-with-special-sunrise-visit

ஆனால், நேற்று முதல் கேரளா சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வரலாறு காணாத அளவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஒன்று கூடி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர். இதனால் கடற்கரைப்பகுதி மற்றும் 16 கால் மண்டபம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Intro:ஓணம் பண்டிகையை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.


Body:ஓணம் பண்டிகையை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்பட்டது இதனையொட்டி கேரளா மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடைகின்றது இதனால் கடந்த சில தினங்களாகவே கேரளா சுற்றுலா பயணிகளின் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது .திருவோண பண்டிகை அன்று கன்னியாகுமரியில் ஓரளவு கூட்டம் மட்டுமே காணப்பட்டது. ஆனால் நேற்று முதல் கேரளா சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களில் ரூம்கள் இல்லாமல் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வரலாறு காணாத அளவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கூடினர். சூரிய உதயத்தைக் காண அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் காத்துக்கிடந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். இதனால் கடற்கரைப்பகுதி மற்றும் 16 கால் மண்டபம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளில் தலைகளாகவே காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.