ETV Bharat / state

'ஆத்தி இம்புட்டு கூட்டமா' - காணும் பொங்கலில் களைகட்டிய கன்னியாகுமரி

author img

By

Published : Jan 17, 2020, 1:52 PM IST

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவான காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.

kanum
kanum

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் பாரம்பரியமாக காணும் பொங்கல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பண்டிகையை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் முக்கியச் சுற்றுலா மையங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அதன்படி சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் வருகைப் புரிந்தனர்.

இங்குள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கடற்கரை அலையில் விளையாடியும், குளித்தும் மக்கள் மகிழ்ந்தனர்.

காணும் பொங்கலில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக காவல் துறை சார்பில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

காணும் பொங்கலில் களைகட்டிய கன்னியாகுமரி

இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

Intro:பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவான காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பதுடன் வருகை தந்து கடற்கரை பகுதிகளில் கூடி அமர்ந்து உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்சியாக கொண்டாடினார்கள். Body:tn_knk_02_kanum_pongal_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவான காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பதுடன் வருகை தந்து கடற்கரை பகுதிகளில் கூடி அமர்ந்து உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்சியாக கொண்டாடினார்கள்.



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவாக பாரம்பரியமாக காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இப்பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களுடன் சென்று ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து உண்பது மரபு. அதன் அடிப்படையில் இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்தனர். இங்குள்ள திருவேணி சங்கமம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடற்கரையில் உள்ள முக்கடல் சங்கமத்தில் அருகே உள்ள திருவேணி சங்கமம் பகுதியில் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா பயணிகள் அமர்ந்து இருந்து பல்வேறு உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி உணவருந்தி மகிழ்சியாக காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.

விஷ்வல்: கன்னியாகுமரி கடல் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம். ஒருவருக்கு ஒருவர் உணவுகள் பரிமாறுதல்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.