ETV Bharat / state

பிரபல நகைக் கடையில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

author img

By

Published : Dec 15, 2019, 5:09 PM IST

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக் கடையில் கடைக்குள் புகுந்து 140 சவரன் தங்க நகைகளை ஒருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

kanniyakumari-jewelry-robbery
kanniyakumari-jewelry-robbery

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகை கடையான சிலங்கா நகை கடையில் நேற்று நள்ளிரவு கடையின் பின்புறம் வழியாக தலைக்கவசம் அணிந்து உள்ளே வந்த ஒருவர் கடைக்குள் புகுந்து 140 சவரன் தங்க நகைக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

140 சவரன் தங்க நகை கொள்ளை-சிசிடிவி காட்சி

இதுகுறித்து, கடை உரிமையாளர் கிறிஸ்டோபர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் மார்த்தாண்டம் காவல்துறையினர் மோப்ப நாய் ஏஞ்சல் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

சென்னையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!

Intro:மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகைக் கடையில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர் கடையின் பின்புறம் வழியாக கடைக்குள் புகுந்து 140சவரன் தங்க நகைக்கு மேல் கொள்ளை போலீசார் விசாரணை .Body:tn_knk_02_jewelry_robbery_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகைக் கடையில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர் கடையின் பின்புறம் வழியாக கடைக்குள் புகுந்து 140சவரன் தங்க நகைக்கு மேல் கொள்ளை போலீசார் விசாரணை .

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகை கடையான சிலங்கா நகை கடையில் நேற்று நள்ளிரவு கடையின் பின் புறம் வழியாக தலைக்கவசம் அணிந்து உள்ளே வந்த கொள்ளையர் கடைக்குள் புகுந்து 140சவரன் தங்க நகைக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளனர் கடையின் பின்புறம் உள்ள அறையில் நகைக்கடை உரிமையாளர் கிறிஸ்டோபர் அவரது மனைவி சாந்தி மற்றும் குழந்தைளுடன் படுத்திருந்த நிலையில் நகை கடையில் சத்தம் கேட்டதை கவனித்து கிறிஸ்டோபரின மனைவி சாந்தி சத்தம் போடவே சூதாகரித்த கெல்மட் அணிந்த கொள்ளையன் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஒரு உள்ளான் இதனால் மற்ற நகைகள் தப்பியது இது குறித்து கிறிஸ்ட்டோபர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில மார்த்தாண்டம் போலீசார் மோப்ப நாய் ஏஞ்சல் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.