ETV Bharat / state

காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை!

author img

By

Published : Jul 15, 2020, 5:48 PM IST

கன்னியாகுமரி: பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்காத மேதையின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை
படிக்காத மேதையின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை

பல தலைமுறைகள் தாண்டினாலும் தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்காது நிலைத்துநிற்கும் பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஊரடங்கிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இவருடைய பிறந்தநாளை பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கொண்டாடிவருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #HBDFATHEROFEDUCATION எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மரியாதை
நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், கன்னியாகுமரியிலுள்ள காமராஜரின் மணிமண்டபத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க; காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சி..தொழில் வளத்தில் தமிழ்நாடு 2ஆம் இடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.