ETV Bharat / state

கன்னியாகுமரியில் விண்வெளி அறிவியல் பூங்கா பணிகள் தொடக்கம்

author img

By

Published : Jan 30, 2020, 7:30 AM IST

கன்னியாகுமரி: கடற்கரை சாலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) சார்பில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவிற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

ISRO Park
ISRO park at kanyakumari

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் பகுதியில் சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது.

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும் இன்றைய அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளிடையே கொண்டு சேர்க்கும் வகையில் இஸ்ரோ சார்பில் அமையவுள்ள இந்த தொழில்நுட்ப பூங்காவில் அதிநவீன தொலைநோக்கு கருவிகள், இந்தியா முதலில் விண்ணில் செலுத்திய செயற்கை கோள், ராக்கெட் முதல் தற்போது உள்ள செயற்கைகோள் அனைத்தின் மாதிரிகளும் இங்கு இடம்பெறுகின்றன.

முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா போன்ற ஏவுதளங்களில் செயற்கைகோள் விண்ணில் செலுத்துவதை இந்த மையத்தில் இருந்தபடியே காணும் வகையில் ரியாலிட்டி திரையும் (Reality Screen) இங்கு அமைக்கப்படவுள்ளது. தற்போது கொல்கத்தாவில்தான் அதிநவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற மையம் அமைந்துள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் அமையவுள்ள இந்த மையம் அதைவிட சர்வதேச அளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் முதல் சந்திர கிரகணம் வரை விண்வெளியில் நடக்கும் அனைத்து அற்புதங்களையும், அதிசய நிகழ்வுகளையும் இந்த மையத்திலிருந்து காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி அறிவியல் பூங்கா பணிகள் துவக்கம்

இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அடிக்கல் நாட்டும் விழா இன்னும் ஒன்றரை மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசின் முக்கிய விருந்தினர்கள், இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: அதிகரித்துவரும் இணைய குற்றங்களின் அச்சுறுத்தல் - அரசு எவ்வாறு கையாளப்போகிறது?

Intro:கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) சார்பில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவிற்கான
ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளது.Body:tn_knk_03_isro_park_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) சார்பில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவிற்கான
ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி சன்செட்பாயின்ட் பகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைகிறது. இதற்காக கடற்கரை பூங்காவில் இருந்த அலங்கார நிழற்குடைகள் அகற்றும் பணி தொடங்கியது.அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் நிலப்பரப்பு சமன்படுத்தப்படுகிறது.
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும், இன்றைய அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே கொண்டு சேர்க்கும் வகையில் இஸ்ரோ சார்பில் அமையவுள்ள இந்த தொழில்நுட்ப பூங்காவில் அதிநவீன தொலைநோக்கு கருவிகள், இந்தியா முதலில் விண்ணில் செலுத்தி செயற்கைகோள், ராக்கெட் முதல் தற்போது உள்ள செயற்கைகோள், ராக்கெட் வரையுள்ள அனைத்தின் மாதிரிகளும் இங்கு இடம்பெறுகிறது. முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா போன்ற ஏவுதளங்களில் செயற்கைகோள் விண்ணில் செலுத்துவதை இந்த மையத்தில் இருந்தபடியே காணும் வகையில் பெரிய திரைகளும் இங்கு அமைக்கப்படவுள்ளது. தற்போது கொல்கத்தாவில் தான் அதிநவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற மையம் அமைந்துள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் அமையவுள்ள இந்த மையம் அதைவிட சர்வதேச அளவில் அதிநவீன தொழில் மையமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 டி ரியாலிட்டி ஸ்கிரீனில்  கிரிக்கெட் விளையாட்டு முதல் டைனோசரை நேரில் பார்ப்பது வரை அமைகிறது. சூரிய கிரகணம் முதல் சந்திரகிரகணம் வரை விண்வெளியில் நடக்கும் அனைத்து அற்புதங்களையும்,அதிசய நிகழ்வுகளையும் இந்த மையத்தில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உலகில் உள்ள முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவாக அமைக்க மத்திய அரசும்,இஸ்ரோ நிர்வாகமும் முயற்ச்சி எடுத்து வருகிறது.
அடிக்கல் நாட்டு விழா :
இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமையும் இடம் கையகபடுத்தப்பட்டுள்ளது.அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.இதற்கான அடிக்கல் இன்னும் ஒன்றரைமாதத்தில் நடக்கிறது.இந்நிகழ்ச்சில் மத்திய,மாநில அரசின் முக்கியவிருந்தினர்கள்,இஸ்ரோ தலைவர்,விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.