ETV Bharat / state

உள்நாட்டு மீனவர் கணக்கெடுப்பு விவகாரம் - மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 23, 2020, 2:47 PM IST

கன்னியாகுமரி: உள்நாட்டு மீனவர் கணக்கெடுப்பை சரியாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Inland fisherman protest
Inland fisherman protest

கன்னியாகுமரி மாவட்டம் உள்நாட்டு மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் உள்நாட்டு மீனவர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மீன்பிடித் தொழில் சார்ந்த கூட்டமைப்பின் மாநில தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டு உள்நாட்டு மீனவர் கணக்கெடுப்பை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "குமரி மாவட்டத்தில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்கள் உள்ளனர். இது குறித்து உண்மையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உள்நாட்டு மீனவர்களுக்கு மீனவர் வாரியதில் ரூ. 3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும்.

மீனவர் வாரியத்திற்கு விண்ணப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் மீனவர்களுக்கு உடனடியாக மீனவர் வாரிய அட்டை வழங்க வேண்டும். புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப் போட்ட மீனவர் விரோத அரசாணைகளை நீக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" எனக் கூறினர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பட்டாசு கடையில் வெடி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.