ETV Bharat / state

உயிரிழந்த மீனவர் உடலுடன் சகமீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்!

author img

By

Published : Aug 31, 2022, 9:57 PM IST

தேங்காய்பட்டணம் துறைமுகத்தை உடனடியாக சீரமைப்பு செய்யக்கோரியும்; உயிரிழந்த மீனவருக்கு நிவாரணம்கோரியும் உயிரிழந்த மீனவர் உடலுடன் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் உடலுடன் சகமீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
உயிரிழந்த மீனவர் உடலுடன் சகமீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

கன்னியாகுமரி அருகே தேங்காய்பட்டணம் துறைமுகம் முறையாக கட்டமைக்கப்படாததால் தொடர்ந்து படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இத்துறைமுகத்திலிருத்து மீன்பிடிக்கச்சென்ற இரயுமன்துறையைச் சேர்ந்த அமல்ராஜ்(64)என்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயமானதைத்தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் சகமீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்த மீனவர் அமல்ராஜின் உடலை மீனவர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரியும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சீரமைப்புப்பணிகளை உடனடியாக தொடங்ககோரியும் உயிரிழந்த மீனவரின் உடலை வைத்து, துறைமுகவளாகத்தில் மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் உடலுடன் சகமீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதையும் படிங்க:தமிழ்நாட்டை குழந்தை நேய மாநிலமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.