ETV Bharat / state

'புலி நடமாட்டம்?' - நாகர்கோவிலில் பரபரப்பு!

author img

By

Published : Dec 12, 2019, 9:20 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் புத்தேரி குளக்கரைப் பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tiger in nagercoil village
Tiger in nagercoil village

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே புத்தேரி குளக்கரையின் கீழ்ப்பகுதியில் பராசக்தி கோயில் உள்ளது. இங்குள்ள பராசக்தி கோயிலில் புலி ஒன்று சுவர் தாண்டிக் குதித்து, கோயில் வளாகத்தினுள் ஓடியதைப் பார்த்ததாக அந்தக் கோயில் பூசாரி கூறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் பகுதியிலும், புலி பதுங்கி இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.

புலி நடமாட்டம்? நாகர்கோவிலில் பரபரப்பு

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதாகத் தகவல் பரவியதால், இப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி குளக்கரை பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதியினர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதனால் கிராமப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி குளக்கரையின் கீழ்ப்பகுதியில் பராசக்தி கார்டன் உள்ளது. இங்குள்ள பராசக்தி கோவிலில் புலி ஒன்று சுவர் தாண்டி குதித்து கோவில் வளாகத்தினுள் ஓடியதாக அந்த கோவில் பூசாரி பார்த்ததாக கூறினார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் வனத்துறையினர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர்மண்டிய பகுதியில் புலி பதுங்கி இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் இப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.