ETV Bharat / state

'மதுபானம் மூலம் பணத்தை அறிவாலயத்திற்கு கொண்டு சேர்த்தது தான் செந்தில் பாலாஜி செய்த சாதனை'

author img

By

Published : Jun 26, 2023, 11:26 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்போடு செய்த வேலை சாராய விற்பனை மூலம் பணத்தை திமுக அறிவாலயத்திற்குக் கொண்டு சென்றதை விட வேறு எதுவும் இல்லை என பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

'மதுபானம் மூலம் பணத்தை அறிவாலயத்திற்கு கொண்டு சேர்த்தது தான் செந்தில் பாலாஜி செய்த சாதனை' -வேலூர் இப்ராஹிம்

கன்னியாகுமரி: பா.ஜ.க., அரசின் 9 ஆண்டுகள் கால சாதனைகளை விளக்கி பேசும் தெரு முனைக் கூட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தேசியச்செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாஜக அரசின் 9 ஆண்டுகள் கால சாதனைகளை விளக்கி கடைகள்தோறும் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம். இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பாஜக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. பாஜக நிலையான ஆட்சியைத் தொடர்ந்து தர முடியும். தேசம் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளது. திராவிட மாடல் என்பது கனிம வள கொள்ளை உடைய மாடலாக உள்ளது. செம்மண் கொள்ளை வழக்கில் மேலும் சில அமைச்சர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது' எனக் கூறினார்.

''பொறுப்பு இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்போடு செய்த வேலை சாராய விற்பனை மூலம் திமுக அறிவாலயத்திற்குப் பணத்தை கொண்டு சென்றதை விட வேறு எதுவும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க., தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார். செந்தில் பாலாஜி-யின் ஊழல் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறி வந்துள்ளதை ஆதாரத்துடன் அண்ணாமலை இரண்டு ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.

அதனால் செந்தில் பாலாஜி மனைவி, நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீதும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தான் நியாயமானது. ஒரு சார்புடையதாக இருக்காது'' எனவும், வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ''மக்களை மகிழ்விக்கக்கூடிய கலைஞர்களை நிச்சயமாக மக்கள் வரவேற்பார்கள். விஜய் சினிமாவில் ஒரு ஹீரோவாக இருப்பது வேறு, மக்களிடத்தில் ரியல் ஹீரோவாக இருப்பது வேறு. அரசியல் ஹீரோவாக வர வேண்டும் என்றால் தேசத்தைப் பற்றி அக்கறை இருக்க வேண்டும்.

வளர்ச்சியைப் பற்றி பேச்சு இருக்க வேண்டும். அதே போன்று மக்களை ஏமாற்றி தவறான விஷயங்களை வழி நடத்தக்கூடிய இந்த திராவிட மாடலின் தொடர்ச்சியாக நடிகர் விஜய் இருந்தால் கண்டிப்பாக தமிழக மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். தேசிய சிந்தனையோடு தேச வளர்ச்சிக்காக தேசிய அரசியல் நீரோட்டத்தில் எங்களோடு கலந்தால் நிச்சயமாக பாஜக வரவேற்கும்'' எனவும் கூறினார்.

''பாரதிய ஜனதா கட்சி பிரதமராக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத வழக்குகள் இல்லாத நேர்மையாளனாக மக்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி யார் ஊழல் செய்தாலும் அதை தட்டி கேட்பேன் என்று யார் சொல்லுகிறானோ அவன் தலைவன். அந்த தலைவனை, அந்த தமிழனை நிச்சயமாக பாஜக சார்பாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் எடப்பாடி பழனிசாமி போன்ற நபர் அப்படிபட்டவரா? என்பதை மக்களிடமே விட்டுவிடலாம்’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: "போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு
பேட்டி : வேலூர் இப்ராஹிம் ( பா.ஜ.க., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் )

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.