ETV Bharat / state

மதூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Feb 5, 2021, 3:35 PM IST

காஞ்சிபுரம்: மதூர் கல் குவாரி விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருமுக்கூடல்-மதூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

stone quarry accident dead person relatives protest
stone quarry accident dead person relatives protest

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவருடைய மூத்த மகன் மணிகண்டனுக்கும் (22) அபிராமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மணிகண்டன் மதூரிலுள்ள ஆறுபடை இன்ப்ராஸ்ட்டர்ஸ் கல் குவாரியில் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்துவந்துள்ளார். கல் குவாரியில் கற்களை வெடி வைத்து தகர்க்க உதவும் கம்ப்ரஸ்சர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.

நேற்றைய தினம் மதூர் கல்குவாரியில் நடந்த விபத்தில் கம்ப்ரஸ்சர் வாகனத்தை இயக்கி கொண்டிருந்த மணிகண்டன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்
இந்தத் துயரமான சூழ்நிலையில் உயிரிழந்த மணிகண்டனின் மனைவி அபிராமி, தாய், தந்தை, அவரது உறவினர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் மணிகண்டன் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், கல் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருமுக்கூடல் - மாதூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க... மதூர் கல்குவாரி விபத்து: தாமதமாகத் தொடங்கிய மீட்புப் பணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.