ETV Bharat / state

புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

author img

By

Published : Aug 15, 2022, 5:25 PM IST

புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்
தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையம் சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறுகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழ்நாடு அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து அதற்கென தீர்மான புத்தகத்தில் கையொப்பமிட்டு அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பத்தை எதிர்த்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அதனைச் சுற்றியுள்ள நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் எடுக்கக் கூடாது என கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாரிசு திரைப்பட காட்சி இணையத்தில் கசிந்தது

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.