ETV Bharat / state

வாரிசு திரைப்பட காட்சி இணையத்தில் கசிந்தது

author img

By

Published : Aug 15, 2022, 2:56 PM IST

Updated : Aug 15, 2022, 6:52 PM IST

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாரிசு பட காட்சி இணையத்தில் கசிந்தது
வாரிசு பட காட்சி இணையத்தில் கசிந்தது

சென்னை: வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் 'வாரிசு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய், பிரபு ஆகியோர் இடம்பெற்று மருத்துவமனையில் படமாக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கறுப்பு டி சர்ட் அணிந்திருக்கும் நடிகர் விஜய், மருத்துவர் உடை அணிந்திருக்கும் நடிகர் பிரபு ஆகியோர் ஸ்ட்ரெச்சரில் ஒருவரை தள்ளி செல்வது போல் அந்த காட்சி உள்ளது.

முன்னணி நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே படக்காட்சி வீடியோ எடுக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினர், திரையுலகினர் மத்தியிலும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 19 இல் வெளியாகும் மேதகு 2..

Last Updated :Aug 15, 2022, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.