ETV Bharat / state

மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதியினர்...!

author img

By

Published : Apr 18, 2019, 2:25 PM IST

காஞ்சிபுரம்: வாக்குப்பதிவு நாளான இன்று காஞ்சிபுரத்தில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் தங்களது வாக்கினை செலுத்தினார்.

திருமண மாலையுடன் வாக்கு பதிவு செய்த புதுமண தம்பதிகள்

தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இந்தத் தம்பதியினர் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

திருமண மாலையுடன் அவர்கள் வாக்களித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண மாலையுடன் வாக்கு பதிவு செய்த புதுமண தம்பதிகள்
புதுமண தம்பதிகள் திருமண மாலையுடன் வாக்கு பதிவு செய்தனர்.


காஞ்சிபுரம் வெங்கடாபுரம் கிராமத்தில் தமிழ்ச்செல்வி மற்றும் ராஜேந்திரன் இன்று காலை செவிலிமேடு அருகே உள்ள நாகேஷ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தனது நாட்டிற்கு ஜனநாயக கடமையை செய்ய காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் செல்வி தனது வாக்கை பதிவு செய்தார். புதுமண தம்பதிகள் மாலை வாக்கு பதிவு செய்ததை நாம் பகுதியில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது

Visual in ftp 

TN_KPM_1_18_NEW MARRIAGE VOTE_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.