ETV Bharat / state

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரே வேலுக்குச் சொந்தக்காரர் - எம்.எல்.ஏ எழிலரசன்

author img

By

Published : Jun 20, 2021, 4:17 PM IST

கோயில்களில் சம்பளமின்றி வேலை செய்யும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவித்தொகை, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

ஸ்டாலின் என்பவரைத் தவிர வேலுக்கு சொந்தகாரர்
ஸ்டாலின் என்பவரைத் தவிர வேலுக்கு சொந்தகாரர்

காஞ்சிபுரம் : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

இதனால் அக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கோயில் நகரமான காஞ்சிபுரத்தில், அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மண்டலம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாதச் சம்பளம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்களும், பூசாரிகளுக்கும், உதவித்தொகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பிரசித்திபெற்ற குமரகோட்டம் முருகன் கோயிலில் இன்று (ஜுன்.20) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்துகொண்டு, உதவித் தொகை, நிவாரணப் பொருட்களை, அர்ச்சகர்கள், பூசாரிகள் என 107 பேருக்கு வழங்கினார்.

தொடந்து பேசிய எம்.எல்.ஏ எழிலரசன், "அறநிலைத்துறை உருவாக்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு நடத்திப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றது.

இன்றைக்கு யாரெல்லாம் வேல் எங்களுக்குச் சொந்தம் என்று கூறுகிறார்களோ, அவர்களுக்கு இந்த வேல் முருகன் உள்ள இந்த முருகன் கோயிலில் இருந்து கூறுகிறேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரைத் தவிர வேலுக்கு சொந்தகாரர் வேறு யாரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர்கள் தியாகராஜன், வெள்ளைச்சாமி, பரந்தாம கண்ணன், ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.