ETV Bharat / state

காஞ்சிபுரம் சிவன் கோயில் குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Feb 8, 2020, 3:26 PM IST

காஞ்சிபுரம்: சிவன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவன் கோயில் கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்பாக்கத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உள்ளே ஓங்கார ஆசிரமம் சார்பாக 10 தேவிகளுக்கு புதியதாக கோயில் கட்டப்பட்டது.

அதில், காளிதேவி, தாரா தேவி, புவனேஸ்வரி தேவி, நித்ய தேவி, திரிபுரபைரவி தேவி, சின்னமஸ்தா தேவி, தூமாவதி தேவி, பகளாமுகி தேவி, ராஜமாதங்கி தேவி, கமலாத்மிகா தேவி போன்ற பத்து தேவிகள் அடங்குவர். இதனையடுத்து இத்திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சிவன் கோயில் குடமுழுக்கு விழா

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் துரைசாமி ராஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கை கண்டுகளித்தனர்.

குறிப்பாக, இந்தியாவிலேயே அசாம் மற்றும் காசியில் தான் 10 தேவிகளுக்கு ஒன்றாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தான் இக்கோயில் அமைக்கப்பட்டள்ளது.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா!

Intro:இந்தியாவிலேயே பத்து தேவிகள் அம்பிகையையும் ஒன்றாக தோன்றியுள்ள கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்பாக்கம் சிவன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது


Body:செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான சிவன் ஆலயத்தில் புதிதாக ஓங்கார ஆசிரமம் சார்பாக கட்டப்பட்டுள்ள 10 நம்பிக்கைகளின் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இக்கோவிலில் முக்கிய அம்சமாக இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே இடத்தில் காளிதேவி தாரா தேவி புவனேஸ்வரி தேவி நித்ய தேவி திரிபுரபைரவி தேவி சின்னமஸ்தா தேவி தூமாவதீ தேவி பகளாமுகி தேவி ராஜமாதங்கி தேவி கமலாத்மிகா தேவி போன்ற பத்து தேவிகளும் அம்பிகையையும் காட்சியளிக்கும் திருத்தலமாக கல்பாக்கத்தில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமம் மூலம் கட்டப்பட்டுள்ள கோவிலாக திகழ்கிறது.




Conclusion:குறிப்பு

இந்தியாவிலேயே அசாம் மற்றும் காசியில் இந்த தேவிகள் காட்சியளிக்கின்றனர் ஆனால் அசாம் மற்றும் காசியில் வெவ்வேறு இடங்களில் மட்டுமே காட்சி தருகின்றனர் ஒரே இடத்தில் பத்து தேவிகளும் முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்பாக்கத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

இந்த கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் துரைசாமி ராஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.