ETV Bharat / state

ஹூண்டாய் நிறுவனத்திற்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

author img

By

Published : Jun 11, 2020, 8:02 AM IST

Updated : Jun 11, 2020, 11:34 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதி மூலம் காஞ்சிபுரம் மாவட்ட கரோனா நலத்திட்ட பணிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் , இது சிறப்பான பணி என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அந்த நிறுவனம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஹீண்டாய்  நிறுவனம்
ஹீண்டாய் நிறுவனம்

கடந்த 75 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல தொழில்கள் மிகவும் பாதிப்படைந்ததால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்..

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் நிறுவனங்கள் தன்னார்வலர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள காட்ராம்பாக்கம், புதுபேரூர், சுமந்திரமேடு, கீவளூர், தண்டலம், செட்டிபேடு, பென்னலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு பிரிவினை சேர்ந்த 2 ஆயிரம் ஏழை எளியவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தண்டலத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா வழங்கினார்.

ஹீண்டாய்  நிறுவனத்திற்க்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ஹீண்டாய் நிறுவனத்திற்க்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு
இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனம் கரோனா காலத்தில் ஏழை எளியோர், கரோனா ஊரடங்கால் பணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 7300 எண்ணிக்கையிலான அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான தரம்வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, முகக் கவசம் உள்ளிட்டவைகளை ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கியுள்ளது சிறப்பான பணி எனவும் குறித்த காலத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிய அவர்களின் பணியை பாராட்டுவதாக தெரிவித்தார்.மேலும் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் பிரதம மந்திரி நிவாரண நிதி, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்விழாவில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் ரமணி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஹீண்டாய் நிறுவன சமூக அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டம்'- நிக்சன் வழியில் ட்ரம்ப்!

Last Updated : Jun 11, 2020, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.