ETV Bharat / state

மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

author img

By

Published : Aug 16, 2021, 6:49 AM IST

மனைவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கணவர் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

husband attempt suicide  husband attempt suicide after murder his wife  husband killed wife  murder  murder case  crime news  kancheepuram murder case  kancheeopuram husband murder his wife  காஞ்சிபுரம் கொலை வழக்கு  கொலை வழக்கு  கொலை  மனைவியை கொன்ற கணவன்  மனைவியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற கணவன்  காஞ்சிபுரம் செய்திகள்  குற்றச் செய்திகள்
கொலை

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அனு என்பவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒன்பது மாத பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் பாலமுருகனுக்கு முன்னதாக திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது என்பது அனுவுக்குத் தெரியவந்துள்ளது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக அனுவுக்கும் பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

வேலைக்குச் சென்ற அனு

இதனால் பாலமுருகனைப் பிரிந்து அனு, தனது தாய் வீட்டிற்கு தனது கைக்குழந்தையுடன் வந்துவிட்டார். இதையடுத்து தனது வாழ்வாதாரத்திற்காக அவர் வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.

பின்னர் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும், தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் அனு தங்கியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட பாலமுருகன், விடுதிக்குச் சென்று மனைவியை வெளியே அழைத்துவந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கழுத்தை அறுத்துக் கொலை

அப்போது தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கழுத்தறுபட்ட அனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிருக்குப் போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட அனுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டியில் அரிவாள் வெட்டு: மகன் உயிரிழந்த நிலையில் தாயாருக்கு தீவிர சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.