ETV Bharat / state

ஊர் மக்களை வெட்டிய கஞ்சா வியாபாரி ; ஊர் தலைவர் பலி!

author img

By

Published : Aug 21, 2019, 5:40 PM IST

காஞ்சிபுரம் : கோவிந்தவாடியில் போலீசில் பிடித்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரி ஜாமீனில் வெளிவந்து ஊர் மக்களை வெட்டியதில் ஊர் தலைவர் பலியானார்.

சித்திகரிப்பு புகைப்படம்

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்தவர் புருஷோத்தமன். இவர் கடந்தசில வருடங்களாக கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார் இதனால் ஊர் இளைஞர்கள், போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என கூறி அவரை கண்டித்த ஊர் மக்கள் காவல் துறையில் பிடித்துக்கொடுத்தனர்.

இந்நிலையில் மூன்று மாதம் வேலூர் சிறையில் இருந்த புருஷோத்தமன் ஜாமீனில் வெளிவந்தார். இதனையடுத்து ஊர் பொதுமக்களை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டினார். மேலும், தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்த ஊர் தலைவர் தனஞ்செழியனை தேடிப்பிடித்து அந்தக் கும்பல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் தாக்குதலில் பலத்த காயமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Intro:Body:

https://www.hindutamil.in/news/crime/512244-furious-at-being-caught-by-police-cannabis-merchant-feisty-town-leader-killed-6-injured.html


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.