ETV Bharat / state

காஞ்சியில் காவல் துறையினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி

author img

By

Published : Aug 16, 2022, 3:00 PM IST

காவல் துறையினர் பங்கேற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது.

அதனைத்தடுக்கும் விதமாக தற்போது இளம் சமுதாயத்தினர் மத்தியில் போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் விழிப்புணர்வு
காஞ்சியில் காவல் துறையினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி

அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் கொடியசைத்துதொடங்கி வைத்தனர்.

இருசக்கர வாகன பேரணி
காஞ்சியில் காவல் துறையினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி

200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதிகள் என காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நிறைவுபெற்றது.

போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சியில் காவல் துறையினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி

இதையும் படிங்க: சுதந்திர தின கொண்டாட்டம் ...75 பைசாவிற்கு 75 பேருக்கு பிரியாணி ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.