ETV Bharat / state

'பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள்’ - சீமான் சாடல்

author img

By

Published : Mar 11, 2021, 7:58 AM IST

காஞ்சிபுரம்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை பேரறிஞர் அண்ணா முன் வைத்தார். ஆனால் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மொத்தமாக பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

nam tamilar katchi
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

எதிர் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் சீமான் நேற்று (மார்ச்.10) பரப்புரை செய்தார்.

அப்போது மக்களிடையே அவர் பேதியதாவது: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணா, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஆனால் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மொத்தமாக பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள்தான்.

மேலும் ஜிஎஸ்டி வரி வரும் முன்பு கடைகளில் பொருள்கள் விற்பனை நடைபெற்றது. அதன் பிறகு கடை விற்பனைக்கு என வந்துவிட்டது. பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு கொண்டு செல்லும் பெற்றோர்களை அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லும் அளவிற்கு கல்வியின் தரத்தை உலகளவில் கொண்டு செல்வேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுக, அதிமுகவிற்கு மாறி மாறி ஓட்டளித்து என்ன முன்னேற்றம் நடந்தது. இவர்கள் ஆட்சியில் மானியம், போனஸ், இலவசம், சலுகை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. விவசாயிகளை கடனாளி ஆக மாற்றி விட்டு விவசாயக் கடன் நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யும் இந்த இரு கட்சியினையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

கடந்த 10 ஆண்டுகளாக நான் சுமார் ஆறாயிரம் மணி நேரம் உங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறேன். எல்லா கட்சிகளும் கூட்டணிக்காக சீட்டு பேரம், நோட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் சாலைக்கு வந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என அவர் பேசினார்.

இதையும் படிங்க:குஷ்பூவின் கனவு கலைந்ததா..? சேப்பாக்கத்தில் பாமக போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.