ETV Bharat / state

மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

author img

By

Published : Mar 24, 2021, 12:48 PM IST

காஞ்சிபுரம்: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான வி.சோமசுந்தரம் வாக்கு சேகரித்தார்.

மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் 1984ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் வென்று 2002 முதல் 2006ஆம் ஆண்டு வரை கைத்தறி அமைச்சராக இருந்தார்.

முன்னதாக இவர் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்த நிலையில், அத்தொகுதி அதிமுக கூட்டணியிலிருக்கும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தற்போது வி.சோமசுந்தரம் உத்திரமேரூரில் போட்டியிடுகிறார். தொடர்ந்து, நேற்று (மார்ச்.23) வாலாஜாபாத் ஒன்றியத்தின் கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.

முன்னதாக, முதலமைச்சர் பழனிசாமி அதிமுகவினர் அனைவரும் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, வி.சோமசுந்தரம் புதுமையான முறையில் பரப்புரையில் ஈடுபட்டார். அதன்படி, வாலாஜாபாத் ஒன்றிய சின்னிவாக்கம் கிராம மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் வழங்கிய அவர், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

தொடர்ந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்த பின்னரே அவர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிகழ்வின்போது, நடிகை பபிதா, கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில இளைஞரணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:'இறையுணர்வுக்கு எதிரானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி' - கே.பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.