ETV Bharat / state

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தை கொலை: மகனுக்கு போலீஸ் வலை!

author img

By

Published : Dec 24, 2020, 6:42 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மது அறுந்த பணம் கொடுக்க மறுத்த தந்தை கொலை
மது அறுந்த பணம் கொடுக்க மறுத்த தந்தை கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள ஏ குமாரமங்கலம் காந்திநகர் பகுதியில் அரசு மறுவாழ்வு இல்லம் உள்ளது. இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் பாலுசாமி என்பவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், பாலுசாமி, அவரது மனைவி வெள்ளையம்மாள், வளர்ப்பு மகன் விஜயராம் ஆகிய மூன்று நபர்களும் அரசு மறுவாழ்வு இல்லத்தின் அருகே குமாரமங்கலம் கிராம எல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தனியாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

பாலுசாமி தனது வளர்ப்பு மகனிற்கு கறிகோழி கடை வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் விஜய் ராம் தனது தாய், வளர்ப்புத் தந்தையிடம் நேற்றிரவு (டிச.23) குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்ததால் வீட்டிற்குள் இருந்த அருவாமனை எடுத்து வளர்ப்பு தந்தையையும், தாயையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த பாலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை: ஒன்பது பேர் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.