பிரபல துணிக்கடை உடை மாற்றும் அறையில் ரகசிய செல்போன்.. கள்ளக்குறிச்சியில் தொடரும் மர்மம்!

author img

By

Published : Jun 28, 2023, 6:58 AM IST

Updated : Jun 29, 2023, 3:30 PM IST

பிரபல துணிக்கடை உடைமாற்றும் அறையில் ரகசிய செல்போன்

திருக்கோவிலூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையின் ட்ரையல் ரூமில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் மறைத்து வைத்திருந்தனாரா? அல்லது வேறு மர்ம நபர்கள் மறைத்து வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் மேலவீதியில் செயல்பட்டு வரும் பிரபல துணிக்கடையில் ஜூன் 26ஆம் தேதி புதிதாக உடை வாங்கச் சென்ற இரு பெண்களில் ஒருவர் தான் வாங்கிய ஆடை சரியாக உள்ளதா என்பதை அறிய அங்கே உள்ள ட்ரையல் ரூம் சென்று ஆடை சரியாக உள்ளதா என பரிசோதிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், தான் உடை மாற்றும் பொழுது மேலே உள்ள ஏசி பாயின்ட்டை தற்செயலாக பார்க்கும் பொழுது அதில் மொபைல் போன் இருப்பதை உணர்ந்து அதனை தன்னுடைய கைகளால் தட்டியுள்ளார். அச்சமயம் அதிலிருந்து பட்டன் போன் ஒன்று கீழே விழுந்து அதிலிருந்து சிம்காடும் வெளியே வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பின்னர் வெளியே வந்து கூச்சலிட்டத்தின் பெயரில் அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கண்ட பெண் ஒருவர் உடனடியாக அந்த உடை மாற்றும் அறைக்கு சென்று அங்கிருந்து போனை கைப்பற்றி அங்கே இருந்து வெளியேற பார்த்தார்.

உடனடியாக செயல்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் துணிக்கடையில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை பிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், "தான் இக்கடைக்கு அதற்கு முந்தைய தினம் தான் ஆடை வாங்க வந்தேன். தான் ஆடைகளை சரி பார்க்க அறையில் உடை மாற்றியதாகவும், தன்னிடம் போதுமான பணம் இல்லாததால் அடுத்த நாள் வாங்கிச் செல்லலாம்" என வந்ததாகவும் கூறினார்.

அடுத்த தான் ஆடைகளை வாங்க வந்த பொழுது உடை மாற்றும் அறையில் கேமரா இருப்பதாக பெண் ஒருவர் கூச்சலிட்டார் . இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் ஒருவேளை எனது படம் ஏதேனும் செல்போனில் பதிவாகி இருக்குமோ? என்ற அச்சத்தில் தான் ஓடிச்சென்று அந்த செல்போனை எடுத்தேனே தவிர, மற்றபடி எனக்கும், அந்த செல்போனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

மேலும், இது தொடர்பாக போலீசாரின் தீவிர விசாரணையில் அப்பெண்ணிற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், அவர் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்குவதற்காக திருக்கோவிலூர் வந்தார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பின்னர், அக்கடையில் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையில்
ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் நேற்று காலை முதல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடையில் உள்ள அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி உரிய நிபுணர்களை வரவழைத்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வேலை நேரத்தில் கடையில் செல்போன் பேச முடியாத நிர்பந்தம் உள்ள காரணத்தால் வேறு யாராவது ஊழியர் அல்லது மர்ம நபர் உடை மாற்றும் அறையில் செல்போனை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர் நகரில் கடந்த சில நாட்களாக விடுதிகளில் தங்கும் தம்பதிகள் மற்றும் துணிக்கடைகளில் ஆடைகளை மாற்றும் பெண்களை குறி வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைக் கொண்டு சில கும்பல்கள் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் முழுமையான விசாரணை முடிந்த பின் முழு அறிக்கை வெளியிடப்படும் எனவும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்..! பதறவைக்கு சிசிடிவி காட்சி..!

Last Updated :Jun 29, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.