ETV Bharat / state

போதையில் காவல் நிலையத்தில் ரகளை: பேருந்து நடத்துநர் கைது!

author img

By

Published : Jun 30, 2021, 12:08 PM IST

உளுந்தூர்பேட்டையில் மது போதையில், மகளிர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் ரகளை செய்த நபர்
காவல் நிலையத்தில் ரகளை செய்த நபர்

கள்ளக்குறிச்சி: கானாடுகாத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர் மதுபோதையில் வேப்பூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அருண்குமார். மதுபோதையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால், உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் அருகில் பேருந்தை நிறுத்தி அருண்குமாரை கீழே இறக்கியுள்ளனர்.


ரகளை செய்த நடத்துநர் கைது:

மது போதையில் இருந்த அருண்குமார் அரை நிர்வாணத்துடன் அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று, பெண் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அருண்குமாரை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது பரிசோதனை செய்தார். பின்னர், அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்கிட்டயா வரி கேட்குற... பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.