ETV Bharat / state

பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் கலக்குவேன்: நடிகர் வடிவேல்

author img

By

Published : Mar 10, 2022, 11:04 PM IST

பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் ஒரு கலக்கு கலக்குவேன் என நடிகர் வடிவேல் தெரிவித்தார்.

நடிகர் வடிவேல்
நடிகர் வடிவேல்

ஈரோடு: பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இவ்விழாவையொட்டி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மைசூரில் நாய்சேகர் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் வடிவேல் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் ஊழியர்கள் வரவேற்றனர்.

நடிகர் வடிவேல்

கோயிலில் அம்மனை பயபக்தியுடன் அவர் வழிபட்டார். வடிவேலுவைக் கண்ட பக்தர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கோயில் ஊழியர்கள் குழு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் ஒரு கலக்கு கலக்குவேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.