ETV Bharat / state

சாலையில் திரியும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

author img

By

Published : Nov 5, 2019, 1:54 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரியும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Wild elephants

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக மைசூரிலிருந்து கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிய லாரிகள் 24 மணி நேரமும் பயணிக்கின்றன.

இதன் காரணமாக லாரியில் கொண்டுவரப்படும் கரும்புத் துண்டுகள் ஆங்காங்கே சாலையில் சிதறி விழுவதால் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கரும்புத் துண்டுகள் தின்பதற்காக இரவு நேரத்தில் சாலையோரம் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே நடந்துசென்று கரும்புத் துண்டுகளைத் தேடின.

சாலையில் திரியும் காட்டுயானைகள்

இதன் காரணமாக சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் யானைகளைக் கண்டு மிகுந்த அச்சமடைந்தனர். சாலையில் சென்ற யானைகள் சாலையோர வனப்பகுதிக்குச் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காலில் கட்டி: குட்டி யானையை காப்பாற்ற மக்கள் கோரிக்கை

Intro:Body:tn_erd_01_sathy_elephant_vis_tn10009

சத்தியமங்கலம் - சாலையில் திரியும் காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமந்துள்ளனர்.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரியும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள கரும்பு ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் 24 மணி நேரமும் பயணிக்கின்றன. லாரியில் உள்ள கரும்புத் துண்டுகள் அங்கங்கே சாலையில் சிதறி விழுவதால் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கரும்புத் துண்டுகள் தின்பதற்காக இரவு நேரத்தில் சாலையோரம் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள சுவர்ணவதி அணை அருகே இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே ஜாலியாக நடந்து சென்று கரும்புத் துண்டுகளை தேடின. இதன் காரணமாக சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் யானைகளை கண்டு மிகவும் அச்சம் அடைந்தனர். சாலையில் சென்ற யானைகள் சாலையோர வனப்பகுதிக்கு சென்றபின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.