ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,429 கனஅடியாக அதிகரிப்பு!

author img

By

Published : Oct 16, 2019, 3:05 PM IST

ஈரோடு: நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் பாவனிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து ஆறாயிரத்து 429கனஅடியாக அதிகரித்துள்ளது.

BhavaniSagar Dam

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு, மாயாற்றில் நேற்று இரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீரின் வரத்து மூன்றாயிரத்து 362 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து ஆறாயிரத்து 429 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானி சாகர் அணை

தற்போது அணையின் நீர்மட்டம் 96.51 அடியாகவும் நீர்இருப்பு 26 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீமான் கருத்திற்கு திமுக வாய் திறக்காதது ஏன்? கராத்தே தியாகராஜன் கேள்வி

Intro:Body:tn_erd_02_sathy_bhavanisagar_dam_vis_tn10009

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6429 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரம் மற்றும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2 வது பெரிய அணையாகும். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நேற்று இரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 4 மணி அணைக்கு நீர்வரத்து 3362 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 6429 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 96.51 அடியாகவும், நீர் இருப்பு 26 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.