ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்; சூடுபிடிக்கும் வாகன தணிக்கை

author img

By

Published : Jan 21, 2023, 7:00 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் கண்காணிப்பு வாகன தணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொகுதியின் எல்லைகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு செய்வதற்காக மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும், தொகுதிக்குள் சோதனை நடத்த மூன்று பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு அலுவலர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 போலீசாரும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் ஏதேனும் வந்தால் அந்த இடத்திற்கு பறக்கும் படை குழு சென்று சோதனை நடத்தும்.

வாகனங்களில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாகவோ, 10,000 ரூபாய்க்கு அதிகமான பரிசு பொருட்களை எடுத்துச் சென்றாலோ உரிய ஆவணங்கள் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் பரிசு பொருட்களும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.2 கோடி பணத்துடன் கடத்தப்பட்ட காரை சாலையோரம் விட்டு சென்ற கொள்ளையர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.