ETV Bharat / state

ஈரோடு தொகுதி வாக்காளர்கள் புத்திசாலிகள், எது சரியென்பது அவர்களுக்கு தெரியும் - டிடிவி தினகரன்

author img

By

Published : Feb 12, 2023, 8:55 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புத்திசாலிகள், எது சரி என்பது அவர்களுக்கு தெரியும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

TTV Dhinakaran
டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (பிப்.11) சத்தியமங்கலத்திற்கு வருகை தந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொல்லிவிட்டோம். மார்ச் 2ஆம் தேதி மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். மக்களை ஏமாற்றும் தீய சக்தி திமுகவிற்கும், அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தி எடப்பாடி கம்பெனிக்கும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இடைத்தேர்தலில் நிறைய பணம் செலவு செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை மக்களிடமே கொடுக்கிறார்கள். ஆள்பவர்களும் சரி, ஆண்டவர்களும் சரி. தேர்தல் ஆணையம் இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புத்திசாலிகள். எது சரி என்பது அவர்களுக்கு தெரியும். அதை அவர்கள் செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கொசு ஒழிப்பு பணியை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும்" - மேயர் பிரியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.